Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மார்ச் 30 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, படுப்பதற்கு மெத்தை வழங்குமாறு கோரப்பட்ட கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முதுகு வலி இருப்பதனால் தனக்கு மெத்தை வழங்குமாறு அவர் கோரியுள்ளதுடன் , அதற்கமைய அவரை வைத்தியர்களிடம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக காமினி பி. திசாநாயக்க கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு மெத்தை தேவைப்பட்டால் அவரது முதுகுவலிக்கு அவர் பெற்ற சிகிச்சை குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அதை சிறப்பு வைத்தியர்களிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் இது தொடர்பாக கவனம் செலுத்தலாம் என வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
38 minute ago
47 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
48 minute ago
1 hours ago