2025 ஜூலை 05, சனிக்கிழமை

சாரதி அனுமதிக்கான சான்றிதழ் அரச வைத்தியசாலைகளில்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான வைத்திய சான்றிதழ்களை, அரச வைத்தியசாலைகள்  ஊடாக  விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேட்டார்  வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு   ஜனாதிபதி அண்மையில்,திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.  இதன்போது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இதற்குத்  தீர்வாக,  இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக,  இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சாரதி அனுமதிப்பத்திரங்களைப்  பெற்றுக்கொள்ளும்போது,  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள்  தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை  மேற்கொள்ளப்படுமென, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .