2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சாரதி அனுமதிப்பத்திரம்; தனியார் துறைக்கு அனுமதி மறுப்பு

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தினூடாக குறித்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தால் 2017 ஆம் ஆண்டு செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை இரத்து செய்து, செயன்முறைப் பரீட்சையை அரச துறையினர் மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சங்கத்தினால் துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .