2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர் கோட்டாபய’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டாபய இந்நாட்டிலுள்ள சிங்கள பௌத்தர் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். அவர் கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள மத்திய வகுப்பினர் மற்றும் தொழில் வல்லுனர்களின் விருப்பங்களை வெற்றிக்கொண்டுள்ளார். அது தொடர்ந்து இருக்க வேண்டும். எமது புதிய கூட்டமைப்புக்கு அது மிகப் பெரிய இலாபம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சிங்கள செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட தடங்கள்களை நீக்கி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தற்போது தெளிவான பாதையை உருவாக்கியுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை பலர் ஒன்றிணைந்து  தீர்மானிப்பர். எமக்குள்ளும் ஒருவர் இருக்கின்றார். அதை இப்போதே சொல்ல மாட்​டோம். நான் நினைக்கின்றேன்  மஹிந்த  ராஜபக்ஸவிடமும் இது தொடர்பான அபிப்ராயம் இருக்குமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக வருவது தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். இது தொடர்பில் நாமும் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம். அவர் மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்திருந்தால் அது எமக்கு பலமாகும் என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .