Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 23 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு சாத்தியமாகும் வரை நிலையான அமைதியோ உறுதித்தன்மையே காணப்படாது என்பதை வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்சின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளதாக சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாகராஜா அலெக்ஸ் உயிரிழப்பதற்கு முன்னர் தாம் காவல்துறையினரின் பிடியில் அனுபவித்த ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து தெரிவித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் தவறியுள்ளதன் காரணமாக அலெக்சின் மரணம் நிகழ்ந்துள்ளதாக பேர்ள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தொடர்ந்து இழைக்கப்படும் குற்றங்களிற்கு நீதியை வழங்கப்போவதில்லை மற்றும் பொறுப்புக்கூறலில் ஈடுபடப்போவதில்லை என்பதை வெளிப்படுத்துவதில் இலங்கை வலுவான அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருவதாக பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
32 minute ago
1 hours ago