2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை செல்லும் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரம் 1 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள் வைத்திருப்பார்களாயின் அது தொடர்பில், ஆராய்ந்து வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கத்துக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் தலதா, இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .