2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சிறுவர்கள் குறித்து எச்சரிக்கை

R.Maheshwary   / 2021 ஜூன் 01 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சிறுவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து, அவதானமாக இருக்குமாறு பொரலை லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த காய்ச்சலானது 5 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு கண், நாக்கு, தோல் சிவத்தல், மூட்டு வலி, மூட்டு வீக்கம் அல்லது சருமத்தில் தோல் அழற்சி போன்ற அறிகுறிகள் காணப்படுவதுடன், 2 வாரங்களுக்கு மேல் காய்ச்சல் இருக்குமாயின் கண்டிப்பாக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் சிறுநீரகம், மூளை, இதயம் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .