Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலை ஆணையாளரை பாதாள குழுவினரின் உதவியுடன் கொலை செய்ய முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த சிலைச்சாலையின் சார்ஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன் சிறைச்சாலைக்குள் செய்துள்ள விஷமத்தனமான செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் அவரை வெளிகள பணிகளில் அமர்த்துவதற்கு சிறைச்சாலை ஆணையாளர் தீர்மானித்திருந்ததாகவும், அதன் காரணமாக ஆணையாளரை கொலைச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் தெரியவந்துள்ளது.
அதன்படி பாதாள குழு உறுப்பினரும் போதைப்பொருள் வியாபாரியுமான 'ராமநாயக்க சுத்தா' என்பவரின் உதவியுடனேயே இந்த கொலை முயற்சியை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளதெனவும், இந்த திட்டத்தை 'ராமநாயக்க சுத்தா' என்பவர் தனது அடியாட்கள் இருவரிடத்தில் அழைபேசி மூலம் கூறிய பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
51 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago