Freelancer / 2025 ஜூன் 14 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும்.
அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வருமான அறிக்கையில் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகள்) குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான சொத்துக்களைக் கொண்டிருந்தால், அவர்கள் அவற்றை எவ்வாறு பெற்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.AN
8 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
27 minute ago