Freelancer / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் நேற்று கட்டாரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2022.03.24 அன்று கடவத்தை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது டி-56 ரக துப்பாக்கியால் சுடப்பட்டு இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் பிணையில் விடுதலையான அவர், நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளிநாடு தப்பிச் சென்றிருந்தார். இதன் காரணமாக அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர் சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
கடவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
10 minute ago
25 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
31 minute ago
34 minute ago