2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சி.ஐ.டியில் நாமல் எம்.பி நாளை ஆஜர்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுப் பிரிவில், (சி.ஐ.டி) நாளை ஆஜராகவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலைச் செய்வதற்கு திட்டம் தீட்டினர் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு, வாக்குமூலமளிப்பதற்கே அவர் ஆஜராகவுள்ளார்.

மேற்படி விசாரணை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியப் பிரஜையினால் வழக்கப்பட்ட வாக்குமூலத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ எம்.பி அழைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை தாக்கல் செய்திருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

அதற்கு, நீதிமன்றமும் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .