Editorial / 2018 நவம்பர் 30 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
11 இளைஞர்களைக் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தாரென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்புப் படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையிலிருந்து, வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலைக்குள் தனிமையை நாடியுள்ளாரெனத் தெரியவருகிறது.
இந்நிலையில், அவரிடம் நலன் விசாரிக்க வருபவர்களை நிராகரித்துள்ள அட்மிரல், வெ ளியிலிருந்து உணவை வரவழைத்து உட்கொள்ள முடியுமென, சிறைச்சாலை அதிகாரிகளால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து அவர், இதுவரையில் எவ்விதக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும் தெரியவருகிறது.
இவ்வாறாக அவர், சிறைச்சாலைக்குள் தனிமையை நாடியுள்ளதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், நேற்று முன்தினம் (28) விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரவீந்திர விஜேகுணரத்ன, நேற்று முன்தினம் இரவே, கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர், பின்னர், வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர், வெலிக்கடை சிறைச்சாலையின் மிகவும் பாதுகாப்பானதொரு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரெனவும் அவரது பாதுகாப்புக் கருதியே, இவ்வாறான தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கப்பம் பெறுவதற்காக, கொழும்பின் சன நெருக்கடிமிக்க பிரதேசங்களைச் சேர்ந்த 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமலாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரெனக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கடற்படையின் லெப்டினன் கொமாண்டரான சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி (நேவி சம்பத்) என்பவர் தலைமறைவாகியிருக்க, மேற்படி பாதுகாப்புப் படைகளின் பிரதானியே உதவினாரென்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் டிசெம்பர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
31 Oct 2025