2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சீதாவை சுட்டவர் சிக்கினார்

Editorial   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது "சீதா" என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 03.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு யானை என நம்பி யானை தவறுதலாக சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, மஹியங்கனை ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற பெரஹரா ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற மஹரகம சீதா யானை மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

47 வயதான சீதா யானை ஊர்வலத்தில் பங்கேற்ற பின்னர் விஹாரையின் மைதானத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

 துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான யானைக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .