R.Maheshwary / 2021 மார்ச் 31 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் இன்று (31) நாட்டுக்குக் கிடைக்கவுள்ளன. சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.
நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீனப் பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4,500 சீனப் பிரஜைகளுக்கு முதற்கட்ட Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
எவ்வாறாயினும்இ ளுinழிhயசஅ தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்துவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகளால் இதுவரை சீனாவின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர், அனுமதி கிடைத்தவுடன் எஞ்சியுள்ள Sinopharm தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago