Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினத்தில் (21) கறுப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்துடன் குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டு 28 மாதங்கள் கடந்துள்ளன.
ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்ததுடன் படுகாயங்களும் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதிக்கு ஒன்றை கடிதத்தை அனுப்பியிருந்தது.
அதனடிப்படையில், தாக்குதலுக்கு காரணமானவர்களை இதுவரையில் இனங்காண அரசாங்கம் தவறிய காரணத்தினால், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று நாடு முழுவதும் கருப்பு கொடி ஏற்றுமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டு கோள்விடுத்திருந்தார்.
எனினும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்த தேவாலயத்திலும் கறுப்புக்கொடிகள் ஏற்றப்படவில்லை.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சியோன் தேவாலயத்தில் கூட கறுப்புக்கொடியை காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago