2025 ஜூலை 16, புதன்கிழமை

சீஸெல்ஸ் செல்ல தயாராகும் ஜனாதிபதி

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8ஆம் திகதி சீஸெல்ஸ் நாட்டுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுதாக, சீஸெல்ஸ் நாட்டின்  வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீஸெல்ஸ் அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சீசெல்ஸ் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருநாடுகளுக்கிடையிலான சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மீன்பிடி மற்றும் கடற்பாதுகாப்பு குறித்து  இருதரப்பு பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் 1988 ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகி 30 வருடங்களாக தொடரும் நிலையில், ஜனாதிபதியின் விஜயத்தின் பின்னர் இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவு மேலும் பலப்படும் என நம்பப்படுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X