2025 ஜூலை 05, சனிக்கிழமை

சீ.ஐ.டிக்கு மாறுகிறது துப்பாக்கி சூட்டு வழக்கு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 09 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.

இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழக்கை சி.ஜ.டிக்கு மாற்றுவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தால் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பொலிஸார், அது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து குறித்த மெய்பாதுகாவலரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

கடந்த அமர்வில் பொலிஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள், நீதின்றில் விண்ணப்பித்திருந்தனர். 

அதனையடுத்து, குறித்த வழக்கினை மீளப்பெற்று வேறு தகுந்த நம்பகரமான விசாரணைப் பிரிவுக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் இல்லத்துக்கு முன்னால் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் பொதுமகனொருவர் கடந்த ஜன் 21ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .