J.A. George / 2020 நவம்பர் 10 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை பின்பற்றாத 120 பேர், கடந்த 30ஆம் திகதி முதல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அப்பகுதிகளில் உள்ள அத்தியாவசிய விநியோக சேவைகள் மற்றும் மருந்தகங்கள் வழமை போல் செயல்பட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அத்தகைய சேவைகளை முன்னெடுக்க, அந்தந்த பிரதேச செயலகம் அல்லது பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
55 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
5 hours ago