Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - சுங்காவில பிரதான வீதியின் திக்கல்பிட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (24) முற்பகல் 8.00 மணியளவில் தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 12 பேர் காயமடைந்து புலஸ்திபுர மற்றும் பொலன்னறுவை போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.
திவுலபிட்டிய பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பஸ்ஸில் 24 பயணிகள் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை பாரதூரமானது அல்ல என பொலன்னறுவை போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புலஸ்திபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago