Editorial / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சந்திராயன்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சூரியனை பற்றிய ஆய்வுக்காக ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) ராக்கெட் மூலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள எல்-1 என்று அழைக்கப்படும் சூரியனின் ஒளிவட்டபாதையில் ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். சூரியனை பற்றிய ஆய்வுக்காக, இஸ்ரோ மேற்கொள்ளும் முதல் விண்வெளி திட்டம் இது. ஆதித்யா-எல்1 என்ற இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் இருக்கக் கூடிய ஒரு ஆய்வுக் கூடமாக செயல்படவுள்ளது.
சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ்( Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer), சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் ( High Energy L1 Orbiting X-ray Spectrometer), கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.
ஆதித்யா-எல்1 ஆய்வுத் திட்டத்தின் முழுப் பணிகளும், உள்நாட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படுகிறது. ஆதித்யா செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை பிஎஸ்எல்வி- எக்ஸ்எல் (சி57) என்ற ராக்கெட் மூலம், செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஆதித்யா-எல்1 திட்டம் மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026