Janu / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த அழகர் கருப்புசாமி (52) எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா (சரவணன் சிவகுமார்) மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்தது. இதில் நடிப்பதற்காகவே குறித்த நபர் தயாராக இருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கழிவறையில் விழுந்து கிடந்த குறித்த நபர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago