2026 மே 09, சனிக்கிழமை

dd

சென்னையில் இலங்கை இளைஞன் மாயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் சென்னைக்கு விஜயம் செய்த இலங்கை இளைஞன் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் சென்னை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆர். தனா சரத் என்ற 26 வயதுடைய குறித்த இளைஞன்  கடந்த ஜுலை மாதம் பெங்களுரு விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.

அதனையடுத்து, அவரது அலைபேசி செயலிழந்துள்ளதுடன், அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் விசாரித்த போது அவர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து, சென்னை சென்றுள்ள அவரது தாய் விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள சீ.சீ.டிவி கமெராக்களை சோதனை செய்த போது குறித்த இளைஞன் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சென்னை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (டெக்கான் குரோனிகல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .