2025 மே 02, வெள்ளிக்கிழமை

சேதனப் பசளை வழங்க முன் மண் பரிசோதனை

Freelancer   / 2021 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயிகளுக்கு  பெரும்போகத்துக்குத் தேவையான சேதன உரத்தை வழங்குவதற்கான மண் பரிசோதனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும் என்று விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜந்த டி சில்வா தெரிவித்தார்.

சேதன உரத்தின் பயன்பாடு குறித்து விவசாய சமூகத்துக்கு தகவல் வழங்குவதற்காக விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்போகத்துக்கான உரங்களை வழங்குவதற்கு முன்பு விவசாய நிலங்களில் மண் பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சொந்தமாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு உர அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .