2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சைட்டத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள 'சைட்டம்' தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, இலங்கை வைத்தியச் சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, எதிர்வரும் 22ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, உயர்நீதிமன்றம் இன்று (01) தீர்மானித்தது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் உபாலி அபேவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால், இன்று இந்த மனு கவனத்திற்கொள்ளப்பட்ட போதே, அதனை விசாரணைக்கு ஏற்க, நீதியரசர்கள் தீர்மானித்தனர்.

சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தே, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .