Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமையால், பிரதான நகரங்களை தவிர ஏனைய இடங்களில் சிகரெட்டுக்கு, சனிக்கிழமை இரவு வரையிலும் தட்டுப்பாடு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை அதிகரிப்படுவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வர்த்தகர்கள் சிகரெட்டுகளை பதுக்கிவைத்து விட்டதாக அறியமுடிகின்றது.
நிதியமைச்சின் அறிக்கையின் பிரகாரம், நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சிகரெட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் சிகரெட் ஒன்றின் விலை 33 ரூபாயாகும் எனினும், கிராம மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் சிகரெட்டு ஒன்று 35 ரூபாவிக்கு விற்கப்படுவதாக அறியமுடிகின்றது.
நிதியமைச்சின் அறிக்கையின் பிரகாரம், 5 சதவீதத்துக்கு குறைந்த மதுசாரம் கலந்த மதுபானங்களின் விலை ஒரு லீற்றர் ஒன்றுக்கு 40 ரூபாயும், 5 சதவீதத்துக்கு மேல் மதுசாரம் கலந்த மதுபானங்களின் விலை லீற்றர் ஒன்றுக்கு 60 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் 160 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago