2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

சு.கவுக்குள் உள்ளக முரண்பாடுகள் இல்லை

Freelancer   / 2022 ஜனவரி 14 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (14) கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
 
சில கட்சிகள் கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவ்வாறான கவலைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு மற்றும் அமைப்பாளர்கள் உந்துதலுடனும் ஆதரவுடனும் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், கட்சிக்குள் பிளவுகள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கொரோனா 19 பரவுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து கட்சி சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும், எனவே கட்சி பிரதிநிதிகள் கிராமங்களுக்கு சென்று கூட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முயற்சிகளால் எந்தவொரு தனிநபரும் கவலையடைய வேண்டாம் என்று கூறிய அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் பலர் பலவிதமான கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவதானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .