2021 மே 15, சனிக்கிழமை

‘சு.கவின் செயற்பாடுகளை முடக்க சூழ்ச்சி’

Gavitha   / 2021 மார்ச் 01 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலின் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக, அதன் செயற்பாடுகளை முடக்க, சூழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது என, அக்கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எம்முடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், தேசிய பட்டியல், இதர பதவிகள் விடயத்தில், வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் தான்தோன்றித் தனமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தங்களது கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தி புதிய கட்சி தொடங்கினார் என்றும் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை மீறி, கட்சியை மீண்டும் சரிவுக்கு இட்டுச் செல்லவும் கட்சியின் தலைவர் மீது நீதமன்ற வழக்கு சுமத்தி மேலும் கட்சியின் செயற்பாட்டை மழுங்கடிப்பு செய்யவும் முயற்சிகள் இடம்பெறுவதாக ரோஹன லக்ஷமன் குறிப்பிட்டார். 

இந்த முயற்சியை தோற்கடிக்க, அனைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், முற்போக்குச் சிந்தனை உடையவர்கள் ஒன்றுதிரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .