Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருடப்பட்ட ஆடுகள் இரண்டை, கறுப்பு கண்ணாடிகளை கொண்ட ஹைபிரட் சொகுசுக் காரொன்றில், கொழும்புக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவமொன்று முந்தல் பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (04) அம்பலமானது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம் பிரதான வீதியில் பயணித்துகொண்டிருந்த சொகுசுக் காரொன்று விபத்துக்குள்ளானது.
விபத்தைக் கேள்வியுற்ற பொலிஸார், ஸ்தலத்துக்கு விரைந்த போது, காரிலிருந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். எனினும், காரைச் சோதனையிட்ட போது காருக்குள், ஆடுகள் இரண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான சொகுசுக் காரானது, கொழும்பு- கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள பெண்ணொருவருடையது என்றும் அப்பெண், கார் வாடகைக்கு விடும் நிறுவனம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
5 hours ago