2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சு.க மத்தியகுழு அவசரமாக கூடும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியகுழு கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த விசேட கூட்டம் இடம்பெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான செயற்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், ஆராயப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.

அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில், சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதியளிக்குமாறு கோருகின்ற குழுவில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அடங்குகின்றனர். அந்த விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களாக கருத்துமோதல்கள் ஏற்பட்டமையால், அந்த விவகாரம் தொடர்பில் இதன்போது ஆராயப்படும் என்று அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X