Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீகா வைரஸ், பல நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்ற நிலையில் நைஜீரியாவில், லஸ்ஸ காய்ச்சலினால், நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக, நைஜீரிய சுகாதார அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நைஜீரிய நோய்க் கட்டுப்பாட்டு நிலையத்தால் கடந்த சனிக்கிழமை (06) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடுமையான குருதிப்போக்கு நோய் காரணமாக, கடந்த ஓகஸ்ட் முதல், 101 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்நோய்த் தொற்றுத் தொடர்பாக, 175 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது வரை, நைஜீரியாவின் தலைநகரான அபுஜா உள்ளிட்ட 19 மாநிலங்களில், மேற்படி நோயுடன் தொடர்புடையவர்களையோ அல்லது ஆய்வுகூட முடிவுகளை எதிர்நோக்கியுள்ள அல்லது ஆராய்சிக்கூடத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களைக் கண்காணித்து வருவதாக, நைஜீரிய நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நைஜீரியத் தலைநகர் அபுஜா, லாகோஸ், ஏனைய 14 மாநிலங்களில், மேற்படி வைரஸினால்,
உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக, நைஜீரியா முழுவதும், ரிபாவிரின் குளிகைகள் உள்ளிட்ட மருந்துகளை, பாரியளவில் விநியோகித்ததகாவும் கை கழுவும் திராவகப் போத்தல்களை விநியோகித்ததாகவும், நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர், கடந்த ஓகஸ்டில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையிலும், கடந்த மாதமே மேற்படி நோய் பரவுவதாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த வரும், மேற்படி நோயினால் 375 பேர் பீடிக்கப்பட்டிருந்ததோடு, அதில், 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தவிர, 2012ஆம் ஆண்டில், 1,723 பேர் நோயால் பீடிக்கப்பட்டிருந்ததுடன், அதில் 112 பேர் இறந்திருந்ததாக நைஜீரிய நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவுக்கு அருகிலுள்ள பெனினில், இந்நோயால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 9 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நோயானது, 1969ஆம் ஆண்டு வடக்கு நைஜீரியாவிலுள்ள லஸ்ஸா நகரில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டமை காரணமாக, அந்நகரத்தின் பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மேற்படி நோயால், ஒவ்வொரு வருடமும் 100,000இலிருந்து 300,000 பேர் வரை பாதிக்கப்படுவதாகவும் அதில் 5,000 பேர் உயிரிழப்பதாகவும் ஐக்கிய அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago