2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சா/த மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்த தடை

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளுக்கு நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரணத் தரப்பரீட்சை டிசெம்பர் மாதம் 6ஆம் திகதியன்று ஆரம்பமாகி, டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்றது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள், பரிசுப் பொருட்களை வாங்குவதற்கு கல்வியமைச்சு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .