2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சூரியவெவ அரங்கில் திருமண வைபவங்கள்

Gavitha   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டரங்கில், நடத்தப்படும் திருமண வைபவமொன்றுக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் வாடகை அறவிடப்படும் என்று தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திருமண வைபவங்களிலிருந்து கிடைக்கும் வருமானம், விளையாட்டரங்கை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்றார்.

நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஹேசா விதானகே, கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

சூரியவவ கிரிக்கெட் விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு 4,283 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. கடன் பெற்றே இவ்விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த விளையாட்டரங்கில் இற்றைவரைக்கும் சர்வதேச ஒருநாள் போட்டிகள் 11, இருபதுக்கு 20 போட்டிகள் ஒன்பதும் நடத்தப்பட்டுள்ளன என்றார். திருமண வைபவமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்படும். அதனை நிறுத்தமுடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த விளையாட்டரங்கை, சர்வதேச ரீதியில் பயிற்சியளிப்பதற்கான நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X