2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞனுக்கு சிறை

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் சிறுவனொருவனை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞனை குற்றவாளியாக இனங்கண்ட  வவுனியா மேல் நீதிமன்றம், அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

7 வயது நிரம்பிய சிறுவனொருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியா அண்ணாநகரைச்சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், 7 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
வளர்ப்பு மீன் விற்பனை செய்யும் கடையில் அதன் நிர்வகித்து வந்த 19 வயதுடைய இளைஞனொருவர் தனக்கு அறிமுகமான 7 வயதுடைய சிறுவனை அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்குமிடையில் அடிதடி பிரச்சினைகள் ஏற்பட்டு விடயம் வவுனியா சிறுவர் பெண்கள் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசாரணைகளின் பின் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இளைஞனுக்கு எதிராக பாரதூரமான பாலியல் துஷ்;பிரயோகம் என்ற குற்றச்சாட்டுடன் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ் வழக்கினை விசாரணை செய்த மேல் நீதிமன்றம் குறித்த குற்றத்தை புரிந்த இளைஞனுக்கு 7 வருட சிறைத்தண்டனை வழங்கியிருந்தது.

குறித்த வழக்கில், சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் ஏற்பாடாகிருந்தார்.

எதிரி சார்பில் சட்டத்தரணிகளான மொஹமட் சபீஸ் மற்றும்; அன்டன் புனிதநாயகம் ஆகியோர் தோன்றியிருந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு,  வவுனியா மேல் நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்பு வழங்கிய போது எதிரி கண்ணீர் விட்டு அழுததை அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .