Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்களும் பஸ்களும் ஓடும்
நேரசூசியில் மாற்றமில்லை
வங்கிச் சங்கத்துக்குத் தடை
தாதியர்கள் குதிக்க மாட்டார்கள்
நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(15) வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்த தொழிற்சங்கங்களில் பல, தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிமசிங்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை அடுத்தே தொழிற்சங்கங்கள் பல, வேலைநிறுத்தப்போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளன. இதேவேளை, தாங்கள் ஏற்கெனவே அறிவித்ததன் பிரகாரம் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை (15) முன்னெடுக்கப்படும் என்று இன்னும் சில தொழிற்சங்கங்கள், இச்செய்தி அச்சுக்கு போகும் வரைக்கும் அறிவித்திருந்தன.
நாடளாவிய ரீதியில் இன்று (15) முன்னெடுக்கப்படவிருந்த அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத்தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்று கெமுனு விஜேரத்ன தலைமையிலான அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்குப் பின்னரும் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கம், தங்களது வேலைநிறுத்தத்தைத் தொடரவுள்ளதாக அறிவித்தது. அனைத்து இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம், ரயில்வே ஊழியர்களின் சங்கம், இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் ஆகியன, இன்று இடம்பெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென, நேற்று அறிவித்தன.
இதேவேளை, கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சை, நேரசூசியில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார, நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்தார்.
இன்று முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில், பரீட்சையை பிற்போடுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடாது குளிசை விற்ற நிறுவனத்துக்கு தண்டம் விண்ணப்பம்
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago