2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சுவிட்சர்லாந்து பயணமாகிறார் பிரதமர் ரணில்

Kanagaraj   / 2015 நவம்பர் 24 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்  நகரில், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள உலக பொருளாதார அமைப்பின் 45ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு பயணமாகவுள்ளார்.

நான்காம் தொழிற்றுறைப் புரட்சியின் தேர்ச்சி என்ற தலைப்பில், 2016ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி புதன்கிழமை முதல், 23ஆம் திகதி சனிக்கிழமை வரை 4 நாட்களுக்கு இம்மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிசார் உள்ளடக்கம், வேலைவாய்ப்பு, திறமை மற்றும் மனித வளம், சுற்றாடல் மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு, உலகளாவிய நிதி முறைமையின் எதிர்காலம், பாலின சமநிலை, இணையத்தின எதிர்காலம், சர்வதேச வணிகம் மற்றும் முதலீடு, நீண்டகால முதலீடு, கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய பூகோள சவால்கள் மற்றும் அது தொடர்பான முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

உலக பொருளாதார அமைப்பின் நிறைவேற்று அதிகாரிகள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவன உறுப்பினர்கள், ஜி-20 மற்றும்  ஏனைய தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் ஆகியோர், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், சர்வதேச அமைப்புக்களில் தலைவர்கள், இளம் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப முன்னோடிகள், சமூக தொழில் முனைவோர், ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஆன்மீக மற்றும் கலாசார தலைவர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .