2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சி.வியின் தீவிரவாதப் பேச்சுக்களே மஹிந்தவுக்கு உயிர்கொடுப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மஹிந்தவின் சகோதரன். மஹிந்த, உயிர்வாழ்வதற்கே, விக்னேஸ்வரனின் தீவிரவாதப் பேச்சு ஒட்சிசனாகிறது. அப்பேச்சே அவருக்கு உயிர்கொடுக்கின்றது என்று, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,   

“பஞ்சசீலக் கொள்கைகளைப் பின்பற்றாத, விகாரைகளின் (பன்சல) பக்கமே செல்லாதவர்கள், பிக்பொக்கட்காரர்கள், பௌத்த மதத்தின் காவலர்கள் போல பேஸ்புக்கில் வந்து, முஸ்லிம்களை அடிப்போம், உதைப்போம் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து, பிரபல்யம் (பப்ளிசிட்டி) அடைவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதேபோல்தான், முஸ்லிம்கள் சிலரும் இருக்கின்றனர். பேஸ்புக்கில், இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தி, அதனைப் பிரசாரப்படுத்துகின்றனர். அவர்களின் பிரசாரத்தின் எமக்குப் பிரச்சினை இல்லை. எனினும், அரேபியக் கலாசாரம் இங்கும் வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும்.   

சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக, முழு நாடுமே ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்லவேண்டும். மூவினங்களும் ஒன்றையொன்று பகைத்துகொண்டு அரசியலில் வெற்றியடைய முடியாது.   

சம்பந்தனிடம் தீவிரவாதம் இல்லை. ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்த வடமாகாண முதலமைச்சரிடம் தீவிரவாதம் உள்ளது” என, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .