2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் உத்தரவு : 20,000 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் களத்தில்

Freelancer   / 2025 நவம்பர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். 

மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும், சுமார் 3,790 பேரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான மையங்களுக்கு கொண்டு வந்துள்ளனர்.

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீதி மூடல்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.

எனினும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்காக இராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X