2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பெயரை சொல்லி குழப்பிய நபர்

Janu   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால்  செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை ஜனாதிபதி அனுரவின் ஆதரவாளர் எனக்கூறிய நபர் ஒருவர் குழப்பியமையால் பதட்டமான நிலமை ஏற்ப்பட்டது.

சர்வதேச சிறுவர்தினத்தன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அந்த இடத்திற்கு வந்த இனம் தெரியாத நபர் ஒருவர் “இது அனுரவின் ஆட்சி நீங்கள் எல்லாம் வயிறுவளர்க்கிறீர்கள். உங்களுக்கு பணம் வருகின்றது. என போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாருடன் முரன்பாட்டில் ஈடுபட்டுள்ளார். உங்களை பொலிஸில் பிடித்துகொடுப்பேன். நான் அனுரகுமாரவுடனேயே இருவருடமாக நிற்கிறேன். பொலிஸூம் புலனாய்வு பிரிவும் வந்து இப்போது உங்களை கைது செய்வார்கள். நாய்களே எல்லாரும் வீடு செல்லுங்கள் என்று ஒருமையில் கண்டபடி திட்டியுள்ளார். இதனையடுத்து காணாமல் போன உறவுகளும் அவருடன் முரன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்தின் பின்னர் குறித்த நபர் அவர்களை அச்சுறுத்தியபடி அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தார் .

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .