Freelancer / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், சந்திக்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தார்.
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. R
34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago