Freelancer / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடபட்டது. (a)

7 hours ago
02 Dec 2025
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
02 Dec 2025
02 Dec 2025