Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள சசிகலா நடராஜன், விரைவில் பதவியேற்பார் என, தமிழ்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு தசாப்தங்களாகப் பயணித்த சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தெரிவானார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அம்மா என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட, அதைப் பின்பற்றி, சின்னம்மா என சசிகலா அழைக்கப்பட்டார்.
தற்போது, அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
இதில், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை விடுத்த கோரிக்கை, முக்கியமானது.
"கட்சித் தலைமையும், ஆட்சி அதிகாரமும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இரண்டும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையதல்ல. சசிகலா முதல்வராகின்றமை, கட்சிக்கும் தமிழகத்துக்கும் இன்றியமையாதது.
"எனவே, அ.தி.மு.கவினரின் விருப்பத்தை ஏற்று, கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளர் உள்ளிட்ட ஒரு பகுதியினரிடத்தில் எதிர்ப்பு இருந்தாலும், சசிகலாவுக்கான ஆதரவு, தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, டிசெம்பர் 31ஆம் திகதி, பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்கும் நிகழ்வுக்கு வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி" என்ற தலைப்பிலேயே அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதில் தன்னை முதலமைச்சர் என விளித்திருக்கவில்லை. அத்தோடு, "சின்னம்மாவுக்குக் கட்டுப்பாட்டு நடப்பேன்" எனவும் தெரிவித்திருந்தார்.
எனவே, முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகி, அப்பதவியை சசிகலாவுக்கு விட்டுக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாட்டின் சில ஊடகங்களின் தகவலின்படி, ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னர், சசிகலா பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்படுகிறது.
அரசியலில் நேரடியான அனுபவமற்ற சசிகலா, தற்போது சட்டசபை உறுப்பினர் கிடையாது. ஆனால், இந்திய அரசியலமைப்பின்படி, கட்சியின் சட்டசபைப் பிரிவு, அவரைத் தலைவராகத் தெரிவுசெய்யுமானால், ஆளுநர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்ய முடியும்.
முதலமைச்சராக அவர் அவ்வாறு பதவியேற்று ஆறு மாதங்களுக்குள், இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு, வெற்றிபெற்றாலேயே போதுமானது. இது, வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். பொதுவாக, கட்சியின் சட்டசபை உறுப்பினர் ஒருவர், தனது பதவியை இராஜினாமா செய்வது வழக்கமாகும்.
ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது ஆர்.கே.நகர் தொகுதியின் உறுப்பினர் பதவி, வெற்றிடமாக உள்ளது. ஆனால், அந்தத் தொகுதியில் அவர் போட்டியிட மாட்டார் என்றே கருதப்படுகிறது. நகரப் பகுதியிலுள்ள தொகுதியொன்றில் அவர் வெற்றிபெறுவது, உறுதியற்றது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆகவே, மாநிலத்தின் தெற்குப் பகுதியிலுள்ள தொகுதியொன்றே, அவருக்காகத் தெரிவுசெய்யப்படும் எனக் கருதப்படுகிறது. மதுரை மாவட்டத்திலுள்ள சட்டூர் தொகுதி உறுப்பினரான வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
என்ன தொகுதி தெரிவுசெய்யப்பட்டாலும், சாதி வாக்குகளைக் கருத்திற்கொண்டே, அந்தத் தெரிவு இடம்பெறுமெனக் கருதப்படுகிறது. குறிப்பாக, தேவர், கௌண்டர் சாதிகள் பெரும்பான்மையாக வாழும் தொகுதியே, சசிகலாவுக்காகத் தெரிவுசெய்யப்படும் என்று, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
14 minute ago
25 minute ago
29 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
29 minute ago
34 minute ago