2021 மே 17, திங்கட்கிழமை

ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு புத்தளத்தில் ஏற்பாடு?

Niroshini   / 2021 மார்ச் 03 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களுடைய ஜனாசாக்களை உரிய முறையில் அடக்கம் செய்வதற்கான  ஏற்பாடுகளை தான் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், இதற்கான உரிய இடங்கள் மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளையும் புத்தளம் நகர சபை மூலம் பெற்றுக்கொடுக்க தாம் தயாராக உள்ளதாகவும்  கூறினார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர்,  ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிய இடங்களை அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறோமென்றார்.

இது தொடர்பாக தாம் சுகாதார அமைச்சிடம் அறிவிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக தன்னோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் தன்னோடு தொடர்பு கொள்ளுமாறும், அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .