Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 21 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் அறிக்கை உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரிவுகள் 92C (தவறான செல்வாக்கு) மற்றும் 82D (அதிகபட்ச நன்மைக்கான வாக்குறுதிகள்) ஆகியவற்றின் தெளிவான மீறலாகும் என்று கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கந்தளாய் மற்றும் மன்னாரில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியை உருவாக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தனது கையை நீட்டி நிதி வழங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago