Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனம் தொடர்பில், ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெற்றவுள்ளதென, தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் கடந்த 23ஆம் திகதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலான காரணங்களைக் கண்டறிந்து, உரியத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கே இவ்விருவரும் சந்திக்கவுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட பெயர், அந்தச் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதே பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பு சபைக்கு கடந்த 23ஆம் திகதியும் அனுப்பிவைத்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்தது. அதன் பின்னரே, ஜனாதிபதியால் அனுப்பிவைக்கப்பட்ட பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago