Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.கமல்
ஒன்றிணைந்த எதிரணி, ஆட்சி மாற்றத்துக்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தனவெனத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பிக்கை உள்ளதெனவும் குறிப்பிட்டார்.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஒன்றிணைந்த எதிரணிக்கு இடையில் நிகழும் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்றிணைந்த எதிரணியினர், ஆட்சி மாற்றம் செய்யப்போவதாகப் பலமுறை கூறியிருந்தனர்; ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். அவை அனைத்தும் தோல்வியிலேயே நிறைவடைந்தன” என்றும் குறிப்பிட்டார்.
தற்போது, இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளும், அவ்வாறானதேயாகும் என்று குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும், நாட்டின் வளங்களை விற்பனை செய்தவர்களுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டணி அமைக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த பேச்சுவார்த்தைகளால், நாடாளுமன்றத்தில் எவ்விதக் குழப்ப நிலைமைகளும் ஏற்படாதெனத் தெரிவித்த அவர், தேசிய அரசாங்கத்தின் பயணத்துக்கும், இதனால் நெருக்கடி ஏற்படாதெனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago