Freelancer / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் இறைச்சி மற்றும் விலங்குகளை கொண்டு செல்வதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டிசெம்பர் 8, 9ஆம் திகதிகளில் கால்நடைகள் திடீரென உயிரிழந்ததையடுத்து, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியை மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் எடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி தடைவிதித்திருந்தார்.
ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் எந்த நோய்த் தொற்றினாலும் கால்நடைகள் உயிரிழக்கவில்லை என்றும் குளிர் காரணமாகவே உயிரிழந்தாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இறைச்சி மற்றும் விலங்குகளின் போக்குவரத்துக்கு நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago