Editorial / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நாட்டுக்கு வெளியே கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பிரகாரம், ஜனாஸாக்களை மாலைதீவுக்குக் கொண்டு சென்று, அங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன என்றும், இதுதொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இதுவரையிலும் அனுமதி அளிக்கவில்லை. ஆகையால், இத்தடை முஸ்லிம்களிடத்தில் பெரும் மனக்கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் பிரதேசங்களில், பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், முஸ்லிம்களின் பங்குபற்றல் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இன்னும், பலர் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்தச் செய்தி தொடர்பிலான மேலதிக தகவல்கள் எவையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026