2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

’ஜனாஸா விவகாரத்தில் பொது இணக்கப்பாடு’

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் குறித்து அரசாங்கம் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, மக்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் சடலங்களை அடக்கம் செய்வதா? எரிப்பதா? என்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிப்பர். எனினும் விசேட சந்தர்ப்பங்களின்போது அரசாங்கம் அது குறித்து தீர்மானம் எடுக்கையில் பௌத்த இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .