2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபையில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார்.

இம்மாதம் 30ஆம் திகதி, நியூயோர்க் நேரப்படி காலை 9.45க்கு ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபை கூட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது, அமெரிக்காவின் ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் பல அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.

அமெரிக்காவுக்கான ஜனாதிபதியின் விஜயத்தின் போது, வெளிவிவகார  அமைச்சர் மங்கள சமரவீர, புத்தசாசன அமைச்சர் புத்ததாஸ ராஜபக்ஷ, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் இந்து அலுவல்கள் அமைச்சர் மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் ஜனாதிபதியுடன் பயணமாகவுள்ளனர்.

மேலும் இந்த பொதுச்சபைக்காக, உலகலாவிய ரீதியில் உள்ள அரச தலைவர்கள் அமெரிக்காவுக்கு வருகை தரவுள்ளதுடன், பாப்பரசர் பிரான்ஸிஸூம்இந்த சபையில் கலந்துகொள்வதற்காக, ஏற்கெனவே நியூயோக்குக்கு வருகை தந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .