Freelancer / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (19) தமது 66-வது பிறந்தநாளைக் அவர் கொண்டாடும் நிலையில், அவரது கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெர்க்சையர் மற்றும் நோர்போக் பகுதிகளில் உள்ள அவரது இல்லங்களில் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கொண்டிருந்த தொடர்புகள் குறித்து நீண்டகாலமாக விசாரணைகள் நடந்து வந்தன.
2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக அண்ட்ரூ பணியாற்றியபோது, அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 'எப்ஸ்டீன் ஆவணங்கள்' மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஆண்டு மன்னர் சார்ள்ஸ் தனது சகோதரர் அண்ட்ரூவிடமிருந்து 'இளவரசர்' மற்றும் 'டியூக் ஆஃப் யார்க்' ஆகிய கௌரவப் பட்டங்களை உத்தியோகபூர்வமாக பறித்தார்.
இதனால் அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுகிறார்.
தனது தரப்பு நியாயமாக, அண்ட்ரூ அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. R
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago